ரணிலுடன் உரையாடிய FBI தலைவர் மற்றும் ட்ரம்ப் ! நிலை குலைந்துள்ள அநுர அரசு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் பெரும் சவாலான அரசியல் வாதங்கள் வலுப்பெற்று வருகின்றன.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வரும் ரணில், பல்வேறு சவால்களையும் எச்சரிக்கைகளையும் அரசாங்கத்தை ழெமம வெளியிடுவது தற்போதைய அரசியல் களத்தின் முக்கிய பேசுபொருள்.
அந்த வகையில் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் சில ஆவணங்களை ரணில் சமர்பித்திருந்தார்.
இந்த சமர்ப்பிப்புக்கு மத்தியில் மீண்டுமொரு சவாலை அரசாங்கத்துக்கு விடுத்துள்ளார் ரணில்.
அந்தவகையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் FBI அறிக்கையும் அதனுடன் தொடர்புடைய பல விடயங்களையும் சுட்டிக்காட்டி இலங்கை மீது அமெரிக்காவின் பார்வை எவ்வாறு விழுந்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அந்த அறிக்கைக்கு புறம்பாக இலங்கை அரசாங்கம் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாக இருந்தால் எவ்வாறான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் ரணில் கூறியுள்ளார்.
ரணில் ஆணைக்குழுவுக்கு முன்னிலையாகியமை நேற்றைய தலைப்புச்செய்திகளாக இருந்தாலும் அங்கு அவர், கூறிய, விளக்கமளித்த எச்சரித்த விடயங்கள் எவ்வாறானவை என்பதை ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
