அனோஜனின் வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றம்: சாணக்கியன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

Shanakiyan Rasamanickam Saudi Arabia Sivarasa Anojan
By Rusath Oct 14, 2026 01:00 PM GMT
Report

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைத் தொடர்ந்து, அவரது வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தச் செய்தி, அவரது குடும்பத்தினருக்கும், அவருக்காக அயராது பாடுபட்ட அனைவருக்கும் பெரும் ஆறுதலையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.

இந்த நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமானது, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அக்கறையுள்ள பொதுமக்கள் ஆகியோரின் கூட்டுமுயற்சிகளையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றது.

சட்ட நடைமுறை

இந்த முக்கியமான முன்னேற்றத்தை நாம் வரவேற்கின்ற அதேவேளை, எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை.

தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயல்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும்.

அனோஜனின் வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றம்: சாணக்கியன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை | Favorable Progress In Anojan S Case Shanakiyan

சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமைவாக, அவரை இயன்றளவு விரைவாகப் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன்.

நன்றியுணர்வு

இந்தக் கூட்டுமுயற்சிக்குப் பங்களித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனோஜனின் வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றம்: சாணக்கியன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை | Favorable Progress In Anojan S Case Shanakiyan

அவர்களது அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை அளப்பரியவை. இன்று இந்தச் சாதகமான முன்னேற்றத்தை நன்றியுணர்வுடனும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் வரவேற்கின்றோம்.

எனினும், சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்பி, தனது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணையும் நாளே நாம் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நாளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிய அனுமதி - கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிய அனுமதி - கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்

டெங்கு நோய்ப் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

டெங்கு நோய்ப் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US