வெளிநாட்டில் உள்ள மனைவியை மிரட்ட கணவன் செய்த செயல்
வெளிநாட்டில் உள்ள மனைவியை மிரட்ட 5 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பும் பணம் போதாது எனவும், மனைவியின் பெற்றோருக்கு அனுப்பும் பணத்தை தனது கணக்கில் வரவு வைக்குமாறும் மனைவியை மிரட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த (34) வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் விசாரணை
சந்தேகநபர் குழந்தையின் தலைமுடியைப்பிடித்து அடித்து துன்புறுத்தி அதனை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தெனியாய பொலிஸில் (31) முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன அமரரத்ன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam