பதினேழு ஆண்டுகள் கடந்தும் மகனை பார்க்க முடியவில்லை: தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை

Missing Persons Sri Lankan Tamils Jaffna Ranil Wickremesinghe Nothern Province
By Theepan Sep 05, 2023 09:05 PM GMT
Report

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை. மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என தந்தை ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (05.09.2023) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “நல்லூர் அரசடி இராணுவ சோதனைச் சாவடியில், கடந்த 2006.10. 25 அன்று இராணுவத்தினால் எனது மகன் அருணகிரிநாதன் சுதன் பிடித்து செல்லப்பட்டார்.

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு


அதன் பின்னர் சில காலம் எனது மகனை இராணுத்தினர் வைத்திருந்ததை எமது உறவினர்கள் நண்பர்கள் பலரும் கண்டு எனக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

விடுதலையை கோரிய போதும் சாத்தியப்படவில்லை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசிய போது 48 பேர் கொண்ட கைதிப்பட்டியலில் தனது மகனும் இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில் மகனின் விடுதலையை கோரிய போதும் அது சாத்தியப்படவில்லை.

பதினேழு ஆண்டுகள் கடந்தும் மகனை பார்க்க முடியவில்லை: தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை | Father Tearful Request Concerned Part Arrested Son

"நாங்கள் நிரபராதிகள் விடுதலைக்கு உதவுங்கள் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் அமைச்சர்களிடம் வேண்டுகோள்" எனும் தலைப்பில் 2007 செப்டம்பர் 8ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் உள்ள புகைப்படத்தில் எனது மகனும் சிறைக்குள் இருப்பது தெரிய வந்தது.

இந்தியாவுக்கு பாரதம் என பெயர் மாற்றும் விவகாரம்: நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் தீர்மானம்

இந்தியாவுக்கு பாரதம் என பெயர் மாற்றும் விவகாரம்: நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் தீர்மானம்


மேலும் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியின் படி அப்போது இருந்த அமைச்சர் ராஜித சேனரத்ன, பிரதி அமைச்சர்களான பி.ராதாகிருஸ்ணன், கே.ஏ.பாயிஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், உள்ளிட்ட பலரும் பூசா முகாமில் கைதிகளை பார்வையிட்டனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

மகனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை

சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுதும் கைதிகள் தொடர்பாக மேலுமொரு இணைய ஊடகமொன்றில் தற்போது வெளியான புகைப்படத்தில் எனது மகன் இருப்பதும் தெரியவந்துள்ளது.

எனது மகன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776323036 என்ற இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.

பதினேழு ஆண்டுகள் கடந்தும் மகனை பார்க்க முடியவில்லை: தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை | Father Tearful Request Concerned Part Arrested Son

எனது மகன் பற்றிய விடயங்களை அறிந்துக்கொள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் என இதுவரை பல இடங்களுக்கு சென்ற போதும் உரிய பதில் கிடைக்கவில்லை.

அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் குறிப்பிட்ட சிலரை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US