சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு..! வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

Vavuniya Sri Lanka Nothern Province Social Media Sri Lanka Transport Board
By Thileepan Jul 22, 2026 07:33 PM GMT
Report

நான் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைப்பெறுகின்ற குற்றச்செயல்களில் அரசுக்கும் தொடர்புள்ளது! சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

நாட்டில் நடைப்பெறுகின்ற குற்றச்செயல்களில் அரசுக்கும் தொடர்புள்ளது! சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

சமூக வலைத்தளங்கள்

அவர் மேலும் குறிப்பிடுக்கையில்,

வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபையினுடைய செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை பெற்று சமூக வலைத்தளங்களில் சில ஊடகங்கள் தவறான வழியிலே பிரசுரித்து வருகின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் குறித்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பாக எங்கள் மீது சொகுசு வாகன வாழ்க்கை வாழ்வதாக ஒரு குற்றச்சாட்டினை மேற்கொண்டிருந்தனர். நாங்கள் சொகுசு வாகனம் ஒன்று வேண்டும் என கேள்வி கோரலினை மேற்கொள்ளவில்லை. மாறாக சபையின் வேலைக்கு ஏற்ற வகையிலான வாகனத்தினையே கேட்டிருந்தோம்.

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு..! வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை | Came To Serve Not Live Luxuriously Vavuniya Chief

ஆனால் ஒரு சில ஊடகங்கள், நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றோம். சொகுசு வாகனத்தில் திரிகின்றோம் என்று தவறான வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். 

உண்மையிலேயே ஊடகம் என்பது நடுநிலைமையாக செயல்பட வேண்டும். நாங்கள் எப்பவுமே ஊடகங்களை மதிக்கின்றோம். ஒரு ஊடகம் சுயாதீனமாக செய்திகளை பகிர வேண்டும். அதை தவிர்த்து எங்களிடத்தில் தான் எல்லாம் இருக்கிறது என செயற்படுகின்றன.

மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்

மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்

1 கோடி பெறுமதியான முன்பள்ளி 

 வவுனியாவிலே எங்களுடைய சபை மட்டுமா இருக்கின்றது? எத்தனை சபை இருக்கின்றது? அத்தனை சபைகளிலும் பிரச்சனை இல்லையா? அதனை ஆதாரத்துடன் நான் நிரூபிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.

அதேபோன்று இங்கே நடக்கின்ற அனைத்து வேலைகளும் நாங்கள் பகிரங்கமாகவும் சரியாகவும் செய்து கொண்டிருக்கின்றோம். நான் இங்கே 25,000 ரூபாய் காசுக்கு உழைத்துக் கொண்டு போவதற்காக வரவில்லை.

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு..! வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை | Came To Serve Not Live Luxuriously Vavuniya Chief

நான் மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தான் வந்தேன். நான் இங்கே வருவதற்கு முன் எங்களுடைய அறக்கட்டளை ஊடாக நிறைய சேவைகளை செய்து கொண்டிருந்தேன்.

உதாரணமாக, என்னுடைய சொந்த காணிக்குள் 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான முன்பள்ளி ஒன்றை கட்டி வருகின்றேன். ஐந்தாம் திகதி அதனை பிரம்மாண்டமாக திறந்து வைக்க இருக்கின்றோம்.

இதேவேளை நாங்கள் வருவதற்கு முன்னர் சபையினுடைய வருமானம் 86 மில்லியனாக இருந்தது. 2026 ஆம் ஆண்டில் 113 மில்லியன் ரூபாயினை ஈட்ட எதிர்பார்க்கின்றோம்.

சுமார் 25 நாட்கள் கடலில் மிதந்த புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு: 140க்கும் மேற்பட்டோர் பலி!

சுமார் 25 நாட்கள் கடலில் மிதந்த புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு: 140க்கும் மேற்பட்டோர் பலி!

மக்களுடைய வரிப்பணம்

நாம் மக்களுடைய வரிப்பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு இங்கு வரவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரச சுற்று நிரூபத்திற்கு ஏற்ப 20 வீதமான பணத்தினை எங்களுடைய சொந்த வருமானத்தில் இருந்து இங்கு பணி செய்கின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நாங்கள் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக எங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தகவல்களை வழங்குவதற்காக அனுமதி அவர்களுக்கு இருக்கின்றது. நிச்சயமாக வழங்கலாம். ஆனால், ஆளுநருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் எங்களுடைய சபையின் நிதி மோசடி செய்யப்பட்டிருக்கின்றது.

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு..! வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை | Came To Serve Not Live Luxuriously Vavuniya Chief

நாங்கள் பாரிய அளவில் நிதி மோசடி செய்திருக்கின்றோம் என மக்கள் குறைகூறுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இம்முறைப்பாட்டை மேற்கொண்டவர் ஒரு தனிநபராவார்.

இந்த நடவடிக்கையானது எங்களை பழிவாங்குவதற்காகவும் எங்களுடைய செயல்பாடுகளை முடக்குவதற்காகவும் மேற்கொண்ட ஒரு செயலாகும்.

மேலும், நான் சபையின் தலைவராக பொறுப்பேற்ற போது எத்தனை கல்குவாரிகளுக்குரிய அனுமதிகள் வழங்கப்பட்டது என்று கேட்டிருந்தார்.

 வீதி புனரமைப்பு 

நாங்கள் அது தொடர்பான விபரங்களை வழங்கியிருந்தோம். ஆனால் இந்த அனுமதியின் ஊடாக வருகின்ற வருமானத்தை வைத்து நாங்கள் வீதிகளை புனரமைப்பு செய்கின்றோம். எங்களுக்கு வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு வருகின்ற நிதி போதாது.

குறிப்பாக, அந்த கல்குவாரியினுடைய உரிமையாளர்களே அந்த வீதிகளை எங்களுடன் கலந்துரையாடி செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு..! வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை | Came To Serve Not Live Luxuriously Vavuniya Chief

இதுவரைக்கும் ஓமந்தையினுடைய வீதி மட்டும் தான் ஒரு பிரச்சனையாக காணப்பட்டது. அதையும் நான் நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடி இருந்தேன்.

தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக என்னுடன் பேசுங்கள், தயவு செய்து வவுனியா - தெற்கு தமிழ் பிரதேச சபை என்கின்ற பெயரை இழிவுபடுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US