டொனால்ட் ட்ரம்ப் பற்றிய வாக்குவாதம்: 23 வயது மகளை கொடூரமாக கொன்ற தந்தை!
அமெரிக்காவில் எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், 23 வயது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையைச் சந்திப்பதற்காக காதலனுடன் அமெரிக்கா சென்றிருந்த மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்
டெக்சாஸில் வசித்து வரும் கிரிஸ் ஹாரிசனைச் சந்திப்பதற்காக, அவரது 23 வயது மகளான லூசி ஹாரிசன் தனது காதலனுடன் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் நடந்த சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர், கிரிஸ் தனது மகள் லூசியை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, சில நொடிகளில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது.
சடலமாக கிடந்த மகள்
லூசியின் காதலன் சாம் லிட்லர் ஓடிச் சென்று பார்த்தபோது, லூசி நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை மகளிடம் காட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்ததாக கிரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிஸ் முன்னதாக மதுவுக்கு அடிமையாக இருந்தவர் என்றும், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று அவர் 500 மில்லிலிட்டர் வெள்ளை ஒயின் அருந்தியிருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையத்து, லூசியின் காதலன் சாம் லிட்லர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.