யாழில் தந்தையின் மோசமான செயல் - 8 வருடங்களாக போராடிய மகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!
யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள்