திருகோணமலையில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு தினம் திருகோணமலையில் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை ஏற்பாடு செய்த குறித்த நினைவு தினமானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் பங்கேற்புடன் மாவட்ட கட்சி காரியாலயத்தில் இடம் பெற்றது.
உணர்வுபூர்வமாக அஞ்சலி
தந்தை செல்வாவின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இதில் திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராஜா(சுப்ரா),பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வெ.சுரேஷ்,கட்சியின் மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார் உட்பட கட்சியின், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கியர்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஒரு தேசத்தின் அடையாளத்திற்கான போராட்டத்தின் இதயமாக விளங்கும் ஒரு மனிதரின் 49வது நினைவு நாளை நாம் மிக உணர்வுபூர்வமாக நினைவு கூர்கின்றோம்.
தமிழினத்தின் உரிமைகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த, நாம் அனைவரும் அன்போடும் மரியாதையோடும் போற்றும் **தந்தை செல்வா** எனப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கு இன்று (26.04.2026) நாம் அஞ்சலி செலுத்துகிறோம் என குறிப்பிட்டார்.



பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri