பேசாலை பொலிஸாரின் அநாகரீக நடத்தை: இணையத்தில் பரவும் காணொளி
மன்னார் - பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இடைமறித்து அநாகரீகமாக நடந்துகொண்டதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த சம்பவம் கடந்த (24.04.2026) இரவு பேசாலை பொலிஸ் நிலைய பிரதான வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு
அன்றைய தினம் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு வீதி போக்குவரத்து பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி, வாகன ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த நபர் அனைத்து ஆவணங்களையும் வழங்கியிருந்த போதிலும், பொலிஸ் அதிகாரி ஒருவர் அவற்றை பரிசீலித்த பின்னர் மீண்டும் வழங்காமல் தனது குறிப்பேட்டில் பதிவு செய்ய முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் கொண்ட நபர், தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சம்பவத்தை தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், குறித்த பொலிஸ் அதிகாரி நபரை தாக்க முயற்சி செய்ததுடன், தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
சிறிது நேரத்திற்கு பின்னர், அந்த நபர் தனது ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், காணொளி வைரலானதைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபடும் சில வீதி போக்குவரத்து பொலிஸார், வழியாகச் செல்லும் மக்களிடமிருந்து பணம் அல்லது மதுபானம் கோருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வன்னி பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri