பெற்ற மகளுக்கு தந்தை இழைத்த கொடூரம் : குற்றப்பார்வை (Photo)
இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வையுடன் இணைந்திருக்கின்றோம்.
அந்த வகையில், தனது மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் பிரதேசத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்றார் என்ற சந்தேகத்தில் காத்தான்குடி பொலிஸார் சிறுமியின் தந்தையைக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிகச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை பகுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இவ்வாரத்திற்கான குற்றப்பார்வை,
