காட்டுயானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13.04.2025) காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய இராசதுரை ரஜீகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கிலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - போரதீவுப் பற்று
மட்டக்களப்பு - போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் மிக நீண்டகாரமாகவிருந்து இவ்வாறு காட்டுயானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும் அதிகரித்தவண்ணமுள்ளன.

எனினும் இதற்கு துறைசார்ந்தோர் நிரந்தர தீர்வை முன் வைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan