இருத்தரப்புக்கு இடையில் சண்டை-மூன்று பிள்ளைகளின் தந்தை கொலை
களுத்துறை தெபுவன குலோடன் தோட்டத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட கந்தசாமி பிரபாகரன்
கோட்டாரி, வாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி இந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் தெபுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குலோடன் தோட்டத்தின் பழைய பிரிவின் நேபட பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பிரபாகரன் என்ற 40 வயது நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக இருந்து வந்த தகராறு
இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலம் இருந்து வரும் தகராறு காரணமாக நேற்றிரவு ஏற்பட்ட சண்டையில் இந்த கொலை நடந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் தலை, கைகள்,கால்கள் உட்பட உடலில் சில இடங்களில் பல காயங்கள் இருப்பதை காணக்கூடியதாக இருந்து என பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்திய வாள் ஒன்றை வீட்டின் சமையல் அறையில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கோட்டாரி, இரும்பு கம்பி என்பன அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றுள்ளன.
சம்பவம் தொடர்பாக களுத்துறை குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
