சம்மாந்துறையில் நான்கு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அம்பாறை- சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என அவரது குடும்பத்தினர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளார்.
வழமை போல் வேலைக்குச் சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடு
இவரைப் பற்றி இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அவரது மனைவியும் பிள்ளைகளும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் இவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காணாமல் போயுள்ள அமீர் அலி பாரிஸ் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அல்லது இவரை எவரேனும் கண்டால், உடனடியாகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் +94 67 226 0222 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு குடும்பத்தினரும், பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri