பெருந்தோட்ட மக்களுக்கு மலையக தேசம் உரிமையாவது எப்போது.. கேள்வி எழுப்பும் அருட்தந்தை மா.சத்திவேல்

Sri Lanka Upcountry People Central Province
By Shan May 17, 2025 11:55 PM GMT
Report

மலையக மக்களால் இரத்தம் சிந்தி உருவாக்கிய மலையக தேசம் அவர்களுக்கு உரிமையாவது எப்போது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் நேற்று (17.05.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும், "அரச தேயிலை தின நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சரின் தலைமையில் அண்மையில் பதுளை ராஜ மஹா விகாரையில் நடத்தப்பட்டது.

இதற்கு அரச மற்றும் சமூக பிரமுகர்களோடு மஹியங்கனை வேடுவர் தலைவரும் அழைக்கப்பட்டு வெகு கோலகாலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு மலையக மண்ணில் 200 வருடங்களுக்கு மேலாக வாழ்வு வேரை கொண்டவர்களும் தேயிலை தொழிலோடு 150 வருடங்களுக்கு மேலாக உயிர் தியாகத்தோடு தம்மை பிணைத்துக் கொண்டு நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல தமது இரத்தத்தினால் சர்வதேச ரீதியில் "இலங்கை தேயிலை" எனும் கௌரவத்தையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்த மலையக பெருந்தோட்ட மக்களை மையப்படுத்தி தேயிலை தின நிகழ்வு நடத்தாதது ஏன்? என்றும் பௌத்தத்திற்கும் தேயிலை தினத்திற்குமானதொடர்பு என்ன? எனவும் கேட்கின்றோம்.

மலையக மண்

தம் முன்னோரின் இரத்தமும் வியர்வையும் கலந்த மலையக மண்ணோடும் தேயிலை தொழிலோடும் வாழ்நாள் தியாகத்தோடு தன் வாழ்வு கலாசாரத்தை உருவாக்கி அரசியல், சமூக சவால்களுக்கு மத்தியில் தேசிய இனமாக வளர்ந்து வரும் மலைய மக்கள் திட்டமிட்டு ஒதுக்கிய பேரினவாத செயல்பாடு என்றே குறிப்பிடல் வேண்டும்.

பெருந்தோட்ட மக்களுக்கு மலையக தேசம் உரிமையாவது எப்போது.. கேள்வி எழுப்பும் அருட்தந்தை மா.சத்திவேல் | Father Mah Shakthivel Report On Upcountry People

மலையக மக்களின் இரத்தம் தோய்ந்த வியர்வை இன்றேல் தேயிலை செடியின் ஆணிவேர் இறந்துவிடும். மலையக மக்களின் உழைப்பு இன்றேல் இலங்கையின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும்.

இத்தகைய பெருமைக்குரிய மலையக தமிழ் தேயிலை தொழிற்சமூகம் தேசிய தேயிலை தின நிகழ்வில் தூரமாக்கப்பட்டமை மலையக மக்கள் தொடர்பாக அரசின் பௌத்த சிங்கள பேரினவாதம் கலந்த அரசியலுக்கு இன்னும் ஒரு உதாரணம் எனலாம். இவ்விழாவைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு அமைச்சர் "பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி கொடுக்கப்படும்.

இந்திய அரச உதவித் திட்டத்தோடு இவ்வருடம் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் அவர்களின் சம்பளம் ரூபா 1700 ஆக அதிகரிக்கப்படும் என மீண்டும் கருத்து கூறியிருந்தார் (இது கடந்த ஆட்சியாளர்களின் அறிவிப்புக்களே).

இடதுசாரிகளின் சாயம்

இதுவும் பெருந்தோட்ட முதலாளித்துவ கட்டமைப்பையும் பாதுகாத்துக் கொண்டு மலையகம் எனும் தேசத்தை தம் உதிரத்தால் உருவாக்கியமக்களின் மண்ணின் உரிமையை மறுத்து அம் மக்கள் சமூகத்தை வாழ்நாள் முழுவதும் முதலாளித்துவத்திற்கு உழைக்கும் அடிமை சமூகமாக தொடர்ந்தும் வைக்க நினைக்கும் பேரினவாத திட்டமென்றே கூறலாம்.

பெருந்தோட்ட மக்களுக்கு மலையக தேசம் உரிமையாவது எப்போது.. கேள்வி எழுப்பும் அருட்தந்தை மா.சத்திவேல் | Father Mah Shakthivel Report On Upcountry People

இடதுசாரிகளின் சாயம் பூசிய தற்போதைய ஆட்சியாளர்கள் பேரினவாதத்தின் காலடிகளில் விழுந்து முதலாளித்துவத்தை தலைமேல் சுமந்து மலையக தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக செயல்படுவது அவர்கள் தமிழர்கள் என்பதற்காகவே. அத்தோடு அவர்கள் தொழிலாளர் என்பதற்காகவும் நசுக்கப்படுகின்றமை அனைத்து ஆட்சியாளர்களுக்கு தொடர்வது வரலாறாகியுள்ளது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழில் பாதுகாப்பு, சமூக கௌரவம் மற்றும் போதிய வருமானமின்மை காரணமாக தொழிலை விட்டும், வாழ்ந்து வரும் மண்ணிலிருந்தும் நாளாந்தம் வெளியேறி கொண்டிருக்கின்றனர்.

தற்போது பெருந்தோட்டங்கள் தனியார் முகாமைத்துவத்தின்கீழ் ஒப்படைக்கப்பட்டப் போது அதன் தொழிற்துறையில் உள்ளாட்சித் 500,000 தொழிலாளர்களை இருந்தாக கூறப்படுகின்றது.

ஆனால் இன்று அவர்களில் 120.000 அளவே இருப்பதால் அந்நிர்வாக முறைமையை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகவே 10 பேர்ச் காணி, வீட்டு திட்டம், சம்பளம் தொடர்பாக தொடர்ந்து அறிவிப்பது (இதனையே கடந்த ஆட்சியாளர்களும் அறிவித்தனர்) முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கே.

அத்தோடு அறிவிக்கும் சம்பளமும் காலத்திற்கேற்றதல்ல என்றே மீண்டும் கூறுகின்றோம். பெருந்தோட்டத்துறை 22 தனியார் கம்பெனிகளிடம் இருந்த போதும் தேயிலை உற்பத்தியில் 75% நிறைவு செய்பவர்கள் சிறுதொட்ட உரிமையாளர்களாகவே உள்ளனர்.

இந்நிலையில் 25% வீதத்தை மட்டும் உப்பு உற்பத்தி செய்யும் பெருந்தோட்ட கட்டமைப்பை தொடர்ந்தும் பாதுகாக்க நினைப்பது மலையக நிலம் எந்த வகையிலும் மலையக மக்களின் கைகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவே. சிறிமாவோ பண்டார நாயக்கவின் ஆட்சி காலத்தில்1970-1977) தோட்டங்கள் அரசுடையாக்குகையில் கிராமங்களை அண்மித்திருந்த தோட்டங்கள் கிராமிய சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கையில் அத்தோட்டங்களில் இலங்கை பிரஜைகளாக மலையக தொழிலாளர் குடும்பங்களுக்கும் சிங்கள மக்களுக்கு போலவே காணிகள் வழங்கப்பட்டன.

மலையக தமிழர்

தற்போது பெருந்தொட்டு தொழிலாளர் குடும்பங்கள் உட்பட அனைத்து மலையக தமிழர்களும் இலங்கை பிரஜைகளாக இருக்கையில் அவர்களை இலங்கை பிரஜைகளுக்குரிய கௌரவத்தை பெற்றுக் கொடுக்கும் முகமாகும் சிறுதோட்ட உரிமையாளர்களாக உயர்த்துவதற்கு அதற்கு அடிப்படை தேவையான காணி உரிமையை கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயங்குவதும் அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியலும் தமிழர்கள் அறிந்ததே.

பெருந்தோட்ட மக்களுக்கு மலையக தேசம் உரிமையாவது எப்போது.. கேள்வி எழுப்பும் அருட்தந்தை மா.சத்திவேல் | Father Mah Shakthivel Report On Upcountry People

பிரித்தானியர் ஆட்சி காலத்தில் 1927 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட "தோட்ட தொழிலாளர் (இந்தியர் )ஆணை சட்டம் பல திருத்தங்களோடு இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழில் புரியும் தொழிலாளர்கள் வீட்டை சொந்தமாக்கவோ புதுப்பிக்கவோ முடியாது எனவும் காணி உரிமை கேட்கவும் முடியாது என்றும் உள்ளது.

அது இன்று வரை நடைமுறையில் இருப்பதும் காலதிற்கேற்றவகையில் மலையக மண்ணில் உழைக்கும் மக்களின் காணி தேவை கருதி திருத்தங்கள் செய்யாதிருப்பது மலையக மக்களின் கைகளில் மலையகம் எனும் அழகிய செல்வம் கொழிக்கும் பூமி சென்றுவிடக்கூடாது எனும் இனவாத உள்நோக்கம் கொண்ட அரசியலின் காரணமாகவே.

இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை மையக மண்ணின் மக்கள் சுதந்திர காற்றை அனுபவிக்க முடியாது. மலையக மக்களைப் பொருத்தவரையில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்கள் இரத்தம் குடிக்கும் அட்டைகளே. உழைப்பையும் அவர்களின் வாக்கையும் தமதாக்கி சுகபோகம் அனுபவிப்பர். இதற்கு அண்மையில் நடந்த தேசிய தேயிலை தினம் தற்போதைய ஆட்சியிலும் இன்னுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.

நாட்டின் வடக்கு கிழக்கு மக்களின் பூர்விக நிலங்களை மிக நீண்ட காலமாக ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்கள் யுத்த காலப் பாதையிலும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர். நிலம் என்பது பேரினவாதத்தின் கையிலே இருக்க வேண்டும் நினைப்பதைப் போன்று மலையத்திலும் தொடர்ந்தும் தோட்டங்களை தனியார் முகாமைத்துவத்தின் கீழ் வைத்திருப்பதும் அதே நோக்கத்துடையே.

இந்நிலமை மாற்றப்பட வேண்டுமானால் வடக்கு, கிழக்கு, மலையகம் இணைந்த தனித்துவ மிக்க அரசியல் மக்கள் சக்தி உருவாகுதல் வேண்டும் .அதுவே காலத்தின் தேவையாகும். அதுவே அரசியல் கௌரவமுமாகும்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US