குடும்ப தகராறை தீர்க்க தலையிட்ட மாமனார் மருமகனின் தாக்குதலில் பலி
மாத்தறை அக்குரெஸ்ஸ இம்புல்கொட பிரதேசத்தில் கோடாரியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இம்புல்கொட வத்த பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
மகளின் குடும்ப தகராறை தீர்க்க தலையிட்ட தந்தை
கொலையான நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறை தீர்ப்பதற்கு தலையிட்டதன் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மருமகன் கோடாரியால் தாக்கி மாமனாரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்
நீதவான் விசாரணைகள் இன்று மரணம் சம்பவித்த இடத்தில் நடந்துள்ளது. சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan
