பிள்ளையுடன் சென்ற தந்தையை மோதித் தள்ளிய பேருந்து - பரிதாபமாக உயிரிழந்த நபர்
குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(12.06.2026) இடம்பெற்ற விபத்தில் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.
தனது 5 வயதுடைய பிள்ளையை தூக்கிக்கொண்டு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பரிதாபமாக உயிரிழந்த நபர்
புத்தளம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, உயிரிழந்தவரை மோதித் தள்ளியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் பிள்ளையையும் உடனடியாக நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த பிள்ளையை மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam