நீர்கொழும்பில் படகு கவிழ்ந்து விபத்து! தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு
நீர்கொழும்பு, முன்னக்கரை களப்பு பகுதியில் படகு விபத்தில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முன்னக்கரை சிறிவர்தன்புர குளத்தில் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபகுதியை சேர்ந்த ரணில் பெர்னாண்டோ (50) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் அவரது 18 வயதான மூத்த மகள் நிலுஷா நெத்மி பெர்னாண்டோ என்ற யுவதியுமே கடலில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்து
வெளிநாட்டிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருவுடன் சிறிய மீன்பிடி படகில் 7 குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ளனர்.

இதன் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் இருவர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan