தாய் வெளிநாட்டில் - மகனுக்கு தந்தை செய்த கொடூரம்
காலி, தொடங்கொட பகுதியில் தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சிறுவன் தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் தெபுவன, பரமுல்லகொட பிரதேசத்தில் வசிப்பதாகவும், தாய் ஓமானில் பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி மாலை அளுத்ஹேன பிரதேசத்தில் விளையாடச் சென்ற சிறுவன் வீட்டுக்கு வந்த போது, குடிபோதையில் இருந்த தந்தை, சிறுவனை திட்டியுள்ளார்.
தந்தையின் செயல்
அதையடுத்து, மகனும் தந்தையை திட்டியதால், ஆத்திரமடைந்த தந்தை, மகனின் முகத்தில் சூடு வைத்துள்ளார்.
மகனின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடங்கொட பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
