முல்லைத்தீவில் தந்தையால் மகளுக்கு நடந்த கொடூரம்
முல்லைத்தீவு மாவட்டம் - ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதி ஒன்றில் 9 வயது சிறுமியை அவரது தந்தை தகாத முறைக்கு உற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயாருடன் வசித்து வந்த குறித்த சிறுமி தந்தை தன்னை தகாத முறைக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிறுமியின் தாயாரினால் கடந்த (04 -12-2023) பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய (04-12-2023) சிறுமியின் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் சிறுவர் அத்துமீறல்
இதேவேளை குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள தந்தை (05.12.2026) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஐயன்கன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் சிறுவர் அத்துமீறல்கள் தொடர்பில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
