மட்டக்களப்பில் தந்தையினால் மகளுக்கு நேர்ந்த விபரீதம்
மட்டக்களப்பில் மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 58 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
தனது மகளை கணவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் நேற்று (15.09.2023) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
