மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது
மகளை கொடூரமான முறையில் தாக்கிய தந்தை ஒருவரை காலி துறைமுகம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ஆசிரியைகளுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவி

காலி- கட்டுகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் 16 வயதான மாணவி, இரண்டு ஆசிரியைகளுடன் சென்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார், தந்தையை கைது செய்துள்ளனர்.
வெயாங்கொடை பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஆன்மிக சக்தியில் நோய்களை குணமாக்கும் நபரின் பிரம்படிக்கு உள்ளாகிய உயிரிழந்த 9 வயதான சிறுமி, இந்த மாணவியின் தங்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் தாய் விளக்கமறியலில்

இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் சிறுமியின் தாய் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக 16 வயதான மாணவி,தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். மாணவியை அவரது தந்தை பல காலமாக கொடூரமாக தாக்கியுள்ளமை நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri