வெளிநாடு சென்ற தாயை பழிவாங்க மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
கொழும்பின் புறநகர் பகுதியான மோதரயில் ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மீதான தாக்குதலை தந்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதறி அழும் காட்சிகள்
தந்தை தாக்கியபோது மகள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக சந்தேக நபரின் தாயாரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றிருந்ததாகவும், அங்கு தாய் செய்த செயலுக்காக பழிவாங்கும் விதமாக மகளை கொடூரமாக தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை
தாக்கப்பட்ட சிறுமிக்கு 5 நாட்களுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

34 வயது சந்தேக நபரின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri