இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு சிறுவனால் நேர்ந்த கதி
இலங்கைக்கு தனது காதலனுடன் வருகை தந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு பூ விற்பனை செய்த 15 வயது சிறுவனே இவ்வாறான செயலை செய்துள்ளதாகவும் அவரை கைது செய்துள்ளதாகவும் கந்தபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயதுடைய நெதர்லாந்து பெண் தனது காதலனுடன் நுவரெலியா, கந்தபொல பகுதிக்கு சென்றிருந்த போது பூ விற்பனை செய்யும் 15 வயது சிறுவன் பூங்கொத்து ஒன்றை கொடுத்துள்ளார்.
பொலிஸ் முறைப்பாடு
இதன்போது சிறுவன் தன்னை கட்டிப்பிடித்து தனது அங்க சேட்டையில் ஈடுபட்டதாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் தனது காதலனுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, பொலிஸார் விசாரணை நடத்தி சிறுவனை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை வெரலவத்தை சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
