திருகோணமலையில் கோர விபத்து: கணவன் உயிரிழப்பு - மனைவி படுகாயம்
திருகோணமலை - நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயம் அடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(11.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டி வேகமாக நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார(50வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
34 வயது இராணு வீரர் கைது
அத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த கே யூ. அனுஷ்கா (46 வயது) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த உதிரி பாகங்கள் மூலமாக அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியான இராணுவ வீரரான 34 வயதுடையவரை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொயவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam