குருநாகல் பகுதியில் நடந்த கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்
குருநாகல் - குளியாப்பிட்டி பிரதான வீதியின் லபுயாய பகுதியில் முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று(18.03.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அதிவேகமாக வந்த அம்புலன்ஸ் வாகனமும், எதிரே வந்த முச்சக்கரவண்டியும் லபுயாய பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் வீரியத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஐவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நால்வரும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
QR முறைமையினால் எரிபொருள் நிலையங்களில் குழப்பநிலை! அதிரடியாக களமிறக்கப்படும் இராணுவம் மற்றும் பொலிஸார்
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam