கண்டியில் கோர விபத்து! இருவர் பரிதாப மரணம்
கண்டியில் ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹசலக்க - ஹெட்டிப்பொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(11) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடவலவில் இருந்து ஹெட்டிப்பொல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும், சைக்கிளில் பயணித்த வயோதிபரும் படுகாயமடைந்த நிலையில், மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பரவதர்ன மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும், 73 வயதுடைய வயோதிபரும் ஆவர். இந்த விபத்து தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
