ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து : சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது என்று ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 3 மணியளவில் டிக்கோயா போடையிஸ் வீதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 34 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
காயமடைந்த அனைவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
விபத்தின் போது பலத்த காயமடைந்த அக்கரப்பத்தனை, வேவல்லி தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் எஸ்.சிவபாலன், ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 66 வயதுடைய பி.லூக்ஸ் என்பவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்த ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri