கொழும்பில் கோர விபத்து! மோட்டார் சைக்கிள் சாரதிக்கு நேர்ந்த கதி
கொழும்பு - ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(09.03.2026) கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துவுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சாரதி கைது
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதா அல்லது அதிக வேகமா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam