கோர விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தாய், மகன் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
அதிவேகமாக வந்த உந்துருளியும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் உயிரிழந்திருந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வீட்டுப்பணிப்பெண்ணும் அடங்குவதாகவும், அவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 61 வயதான ஹேமா பரணகம, அவரது மகன் லஹிரு ஷெஹான் டி கோஸ்டா, 26, மற்றும் அவர்களது உறவினர் மேரி தெரசா கோஸ்டா 84 உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞர் பிரபல ஹோட்டலில் சமையல்காரர் எனவும், அதே நேரத்தில் உயிரிழந்தவரின் அத்தை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற தலைமை செவிலியர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே...! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு
மூவரின் பிரேத பரிசோதனை
குறித்த விபத்து நடந்த நேரத்தில் தாய், மகன்,அத்தை மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோர் அனுராதபுரத்திற்கு யாத்திரைக்காக காரில் பயணம் சென்றதாக கூறப்படுகிறது.
இதன்போது வானில் பயணித்த 6 வயது சிறுவன், நான்கு பெண்கள் மற்றும் சாரதி உட்பட ஏழு பேர் புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த மூவரின் பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட உள்ளது.


பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri