ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவில் வசித்து வரும் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றியும், போக்குவரத்துக்குரிய பாதைகள் சேதமடைந்து காணப்படுவதுடன், காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
துரித நடவடிக்கை
இதேவேளை, தற்போது அப்பகுதியில் பெரும்போக வேளாண்மை அறுவடை மேற்கொண்டு வருவதன் காரணமாக விவசாயிகள் இரவு வேலைகளிலும் தங்களது பணிக்காக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ள அனர்த்தத்தினால் சேதம் அடைந்த மின்சார கம்பங்களை திருத்தும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகளும், விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |