உலக உணவுத்திட்டத்தினால் பயனடையும் இலங்கையின் விவசாயிகள்
உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) உணவுப் பாதுகாப்பு முயற்சியால், பின்தங்கிய விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் வானிலை மற்றும் காலநிலை தகவல்களை வழங்குவதன் ஊடாக அசாதாரண வானிலை முறைகளுக்கு ஏற்ப, விவசாயிகளுக்கு உதவும் இந்த திட்டமாக அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உலக உணவுத்திட்டம், இலங்கைக்கு ஒக்டோபர் மாதம் முதல் ஐந்து வருடங்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கி இந்ததிட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
இலங்கை, இந்திய விவசாயிகளின் அனுபவங்கள்
இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேலும் 7 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இந்த திட்டத்துக்கு கிடைக்கவுள்ளன.
மொனராகலையின் கதிர்காமம், செவனகல, மற்றும் தனமல்வில ஆகிய பிரதேச செயலகங்களை சேர்ந்தவர்களும், குருநாகலில் மஹோ, நிக்கவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பிரதேசசபைக்கு உட்பட்டவர்களும், திருகோணமலையின் கந்தளாய், கிண்ணியா, குச்சவெளி, மற்றும் மூதூர் பிரதேசசபைக்கு உட்பட்ட விவசாயிகளும், வவுனியா செயலப்பிரிவு, மன்னார், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் இந்த திட்டத்துக்காக விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான துணைப் பணிப்பாளர் ஜெரார்ட் ரெபெல்லோ, பின்னடைவைக் கட்டியெழுப்புவது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பது மட்டுமன்றி, உணவுப் பாதுகாப்பையும் இந்த திட்டம் உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் இலங்கை மற்றும் இந்திய விவசாயிகளின் அனுபவங்களும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |