நுவரெலியாவில் விவசாயிகள் போராட்டம் - மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியும் எரிப்பு
நுவரெலியாவில் உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் (Mahindananda Aluthgamage) கொடும்பாவியை எரித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (17) நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில் பேரணியாக சென்று தமது போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இப்போராட்டத்தில் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழிக்க வேண்டாம். கோவிட் பரவலுக்கு மத்தியில் பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களும் கடைகளை மூடி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.








ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam