அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள்(Photo)
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறுவடைக்கான எரிபொருள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பல விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஒரு லிட்டர் டீசலை 1200 ரூபாய்க்கு அதிகமான பணத்தை கொடுத்து கொள்வனவு செய்து அறுவடையினை மேற்கொள்ள வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு
அறுவடை செய்து அந்த நெல்லை விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைத்திருந்த போதிலும் அதற்கான வியாபாரிகள் வெளிமாவட்டத்திலிருந்து எரிபொருள் இன்மை காரணமாக நெல்லை கொள்வனவு செய்வதற்காக வருவதில்லை.
இந்நிலையில் எரிபொருள் இன்மை காரணமாக மிக குறைந்த விலைக்கே நெல்லினை கொள்வனவு செய்ய பலர் முயற்சிக்கின்றனர். இதன் காரணமாக விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை தொடர்ச்சியாக உலர விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நெல் அறுவடை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கான நெல்லினை விற்பனை செய்வதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அறுவடை ஆரம்பக் காலப்பகுதியிலே
தீர்மானிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் வங்கிகளில் கடன்
பெற்று இந்த கடனை அறுவடை முடிந்தவுடன் மீள வழங்கும் வகையில் கடன் பெற்றதாகவும்
விவசாயிகள் தெரிவித்துள்ளனர் .



