மட்டக்களப்பில் யானை தாக்குதலால் விவசாயி பலி
மட்டக்களப்பு வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(01.05.2025) இடம்பெற்றுள்ளது.
நாவற்காடை சேர்ந்த 70 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்ற குறித்த நபர், காலையாகியும் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
இதன்போது, அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அப்பகுதியில் நீண்ட காலமாக உலாவி திரியும் காட்டு யானையால் இவர் தாக்கப்பட்டு பரிதாபகரமாக மரணித்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி - ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
