யானையின் தாக்கி விவசாயி உயிரிழப்பு
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர பகுதியிலுள்ள வீதியில் யானை தாக்கியதில் விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(25) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அதே பகுதியில் வசித்து வரும் 59வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யானை தாக்குதலுக்கு உள்ளான நபர் எரிபொருள் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்றுமுன்தினம்(25) இரவு10.00 மணி அளவில் சென்றபோது வீதியில் நின்ற யானை அவரை அவ்விடத்தில் வைத்து தாக்கியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா (26) பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam