ஜனாதிபதி கூறுவதை போல் செய்து பாருங்கள் - திருகோணமலை விவசாயி கூறும் விடயம்
திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் சேதனப் பசளையை பயன்படுத்தி வேளாண்மை செய்கையை மேற்கொண்டு வருகின்றார்.
ஐம்பது ஏக்கரிலும் வேளாண்மை செய்கை செய்யப்பட்டுள்ளதுடன், வேளாண்மை சிறந்த முறையில் உள்ள நிலையில் தனக்கு விவசாய உத்தியோகத்தர்களினால் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படுவதாக குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.
திரியாய் பகுதியைச் சேர்ந்த கே.கிருபராஜா (K.Kiruparaja) என்கின்ற அந்த விவசாயி தனது சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த இருபது வருடங்களாக நான் விவசாயம் மேற்கொண்டு வருகின்றேன். எனது சொந்த ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கையை சேதனப் பசளைகளை பயன்படுத்தி மேற்கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் சிறந்த விளைச்சளை பெற்றுள்ளேன். இம்முறையும் நல்ல விளைச்சளை பெறுவேன் என்கின்ற நம்பிக்கை எனக்குள்ளது.
நாட்டின் ஜனாதிபதி கூறுகின்றது போல் ஒருதடவை செய்து பாருங்கள் நல்ல விளைச்சளை பெறலாம் என தெரிவித்துள்ளார்.



லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri