குருக்கள்மடம் பகுதியில் ஆரம்பமான விவசாயிகளுக்கான பண்ணை வியாபாரப் பயிற்சி
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பண்ணை வியாபாரப் பாடசாலை கருப்பொருளியிற்கு கீழ் பயிற்சிநெறி ஒன்று குருக்கள்மடம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாதுளை பயிற்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு இப்பயிச்சிநெறி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வியாபாரமாக விவசாயத் தொழில், பண்ணையின் தற்போதைய நிலமைகளை ஆராய்தலும், சந்தைவாய்ப்புக்களை இனம்காணலும், விவசாய வியாபாரம் தொடர்பான அடிப்படை எண்ணக்கருக்களை தெளிவுபடுத்துதல், விற்பனையும் சந்தைப்படுத்தல், சந்தை மதிப்பீட்டிற்கு ஆயத்தமாதல், பண்ணைப் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் வியாபாரத்திட்டமிடல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போது விவசாயிகளுக்கு தெளிவூட்டப்படுகின்றன.
விவசாயிகளுக்கு சான்றிதழ்
இப்பயிற்சிநெறி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், இறுதியில் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இதன்போது, சிரேஸ்ட விவசாயப் போதனாசிரியரும், பயிற்றுவிப்பாளருமான சிறிபவன் வளவாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்குரிய பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.