பிரபல பாதாளக்குழு உறுப்பினர் கொலை : மேலும் ஒருவர் கைது!
பிரபல பாதாளக்குழு உறுப்பினர் சன்ஷைன் சுத்தா எனப்படும் அமில பிரசங்க ஹெட்டிஹேவாவை கொலை செய்வதற்காக டிங்கர் லசந்த எனப்படும் ஹேவாதுனுவிலகே லசந்தவுடன் வாகனத்தில் பிரவேசித்த சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தம்புத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் ஓட்டோ என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் மட்டக்குளி சமிட்புர பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்ஷைன் சுத்தா கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி கொடவில பகுதியில் வாகனத்தில் பயணித்துகொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட டிங்கர்
லசந்த, மறைத்து வைத்துள்ள ஆயுதங்களைக் காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டபோது
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
