ஹரக் கட்டா விவகாரம்:மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பிரபல பாதாள உலக நபரான ஹரக் கட்டாவுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் இருந்து அண்மையில் தப்பிச் செல்லும் முயற்சியின் போது, ஹரக் கட்டாவுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
இருப்பினும், 'ஹரக் கட்டாவின்' உதவியாளர் என்று அடையாளம் காணப்பட்ட மற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் இன்னும் தலைமறைவாக இருந்து வருகிறார்.
தப்பி செல்ல முயற்சி
குறித்த கான்ஸ்டபிள், ஹரகட்டாவின் கைவிலங்குகளை அகற்றிய நிலையில் அவர், அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறிக்க முயன்றார். எனினும் பொலிஸார் விரைந்து செயற்பட்டு அவர் தப்பிச் செல்வதை தடுத்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் ஹரகட்டாவுக்கு உதவிய கான்ஸ்டபிள் வளாகத்தை விட்டு தப்பிச் சென்று இன்றுவரை தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட திரிபோலி குழு உறுப்பினர்: முன்னாள் வட மாகாண அமைச்சர் குற்றச்சாட்டு
இதற்கு பதிலாக குறித்த கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 90 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்