பிள்ளையான் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட திரிபோலி குழு உறுப்பினர்: முன்னாள் வட மாகாண அமைச்சர் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Pillayan Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Keethan Sep 30, 2023 03:22 PM GMT
Report

தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள், இயக்கங்களின் ஒருங்கிணைப்பினை இல்லாமல் செய்வதற்கான ஒரு குழு மிக நீண்டகாலமாக பராமரித்து வருகின்றார்கள் அதுதான் திரிபோலி குறுப், அந்த குழுவினை சேர்ந்தவர்கள் தான் பிள்ளையான் குழுவினரும் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் இலங்கையின் வரலாற்றில் நீதித்துறையில் சார்பு நிலை என்பது நீண்டகாலமாக பேரினவாத சக்திகளால் பல வழிகளிலும் நீதித்துறைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது அறிந்த விடயம், பேரினவாத சக்திகள் தங்களுக்கு சார்பான தீர்ப்பு வரவேண்டும் என்பதிலே பல வழிகளிலும் நீதிதுறையினை அழுத்தத்திற்கு உட்படுத்தி இருக்கின்றது வெளிப்படையான விடையம் இன்று அது உச்ச கட்டமாக இருக்கின்றது.

பிள்ளையான் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட திரிபோலி குழு உறுப்பினர்: முன்னாள் வட மாகாண அமைச்சர் குற்றச்சாட்டு | Pillaiyan Group Also In Tripoli Group Sivanesan

நீதித்துறை கேள்விக்குறி

ஒரு நீதிபதியின் பெயரினை உச்சரிப்பது கூட நீதியினை மதிக்கின்ற சமூகத்தில் நாங்கள் இருக்கின்றபடியால் தயக்கமாக இருக்கின்றது. இன்று அவர் பதவி விலகி இருக்கின்றார் என்பதை இலங்கையில் இருக்கின்ற ஜனநாயக ரீதியா சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

இது இனரீதியாக பார்க்கக்கூடிய விடையமல்ல, இலங்கையின் நீதித்துறை இன்று மிகவும் ஒரு கேள்விக்குறியான விடயத்தில் வந்திருக்கின்றது.  ஒரு நீதிபதி தன்னுடைய தீர்ப்பினை நியாயமான முறையில் தெரிவிப்பதில் கூட அழுத்தங்கள் பிரயோககிக்கப்படுகின்றது என்றால் இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று ஜனாதிபதி உலகரீதியாக வலம் வந்து ஜனநாயத்தினை பேசிவரும் காலகட்டத்தில், இலங்கையில் தன்னுடைய ஆட்சிக்கு கீழ் இருக்கின்ற நீதிபதி தனக்கு நீதி வழங்கியதற்காக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்காக பதவியில் இருந்து விலகியது மாத்திரமில்லாமல் இங்கு இருக்கமுடியாமல் நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்கவேண்டும்.

பிள்ளையான் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட திரிபோலி குழு உறுப்பினர்: முன்னாள் வட மாகாண அமைச்சர் குற்றச்சாட்டு | Pillaiyan Group Also In Tripoli Group Sivanesan

இது நியாயம் தானா இந்த நாட்டில் நீதி இருக்கின்றதா? ஆகவே மிக நீண்டகாலமாக தமிழ்மக்கள் இந்த அளவிற்கு நீதிதுறையால் மாத்திரமல்ல நாட்டிலுள்ள அமுலாக்க பிரிவினால் அனைத்தினாலும் தமிழ்மக்களுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகித்துக் கொண்டுவருவது நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது அதற்காக போராட்டங்கள் நடந்தது இதனால்தான் என்பதை இன்றாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது என்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியத்திற்கு எதிரான குழு

இலங்கையில் இயங்கும் திரிபோலி குறுப்... இன்று சனல் – 4  கொண்டுவந்த விடையங்கள் வெளிப்படையான விடையங்களாக தோன்றுகின்றது. திரிபோலி குறுப் என்ற ஒரு விடயத்தினை சொல்லியுள்ளார்கள்.

அதில் பல உண்மைகள் இருக்கின்றது என்னுடைய இயக்க வாழ்க்கையிலும் கட்சி வாழ்க்கையிலும் சரி அவதானிப்புக்களை வைத்து பார்க்கின்ற போது திரிபோலி குறுப் என்பதை விட தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு குழுவினை பேரினவாத சக்திகளின் ஆழுகைக்கு உட்பட்டு அமுலாக்கபிரிவுகளுக்குள் தொடர்ந்தும் பராமரித்து வருகின்றார்கள் என்பது உண்மை.

தமிழ்தேசிய தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பினை இல்லாமல் செய்வதற்கான ஒரு குழு மிக நீண்டகாலமாக பராமரித்து வருகின்றார்கள்.  பேரினவாத சக்திகள் எதனை நினைக்கின்றார்களோ அதனை செயற்படுத்துவதற்கு இவர்கள் நேரடியாக பங்கு பெற்றாமல் இயக்கங்களில் இருக்கின்றவர்கள் முரண்படுபவர்கள் போன்றவர்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்களை இயக்கு கின்றார்கள்.

பிள்ளையான் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட திரிபோலி குழு உறுப்பினர்: முன்னாள் வட மாகாண அமைச்சர் குற்றச்சாட்டு | Pillaiyan Group Also In Tripoli Group Sivanesan

போர் முடிந்து மிக நீண்ட காலங்களுக்கு பிறகும் கூட இராணுவ முகாம்களில் இருந்து இந்த குழுவில் இருப்பவர்களுக்கு நிவாரணமாக கூட கொண்டு சென்று வழங்குகின்றார்கள்.  போரினவாத சக்திகளால் உருவாக்கப்பட்ட இந்த திரிபோலி குழு இருந்திருக்கின்றது என்பதில் உண்மை இருக்கின்றது எங்கள் அவதானிப்பில் அது இன்றுவரை இருக்கின்றது.

ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவென்றால் இந்த குழுவில் சாதாரண உறுப்பினர்களை மட்டும் சேர்த்து வைத்திருக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் வரை பல தரப்பினரும் இந்த குழுவிற்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவர்களுடைய வேலை தமிழ்தேசிய பரப்பில் இருக்கின்றவர்கள் ஒருங்கிணைய நினைக்கின்றபோது அவர்களை பலவீனப்படுத்துவதுதான் முதன்மை நோக்கமாக இருக்கின்றது பிள்ளையான் குழுவும் அந்த குழுவினை சேர்ந்தவர் தான்.

இப்படியானவர்களை கொண்டு தமிழ்தேசியத்தினை பலவீனப்படுத்துவது தொடர்ச்சியாக இருக்கின்றது இந்த விடையத்தினை தங்கள் அரசியலின் தேவைக்காக பயன்படுத்தியவர்கள் மகிந்த ராஜபக்ச கட்சிதான் என்பதில் உண்மை நாடாளுமன்றத்தில் குழுவின் செயற்பாடு.

பிள்ளையான் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட திரிபோலி குழு உறுப்பினர்: முன்னாள் வட மாகாண அமைச்சர் குற்றச்சாட்டு | Pillaiyan Group Also In Tripoli Group Sivanesan

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் பின்னர் கூட தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற பொது பதத்தின் ஊடாகத்தான் சர்வதேச சமூகத்தினை சந்தித்தது போன்ற விடையங்களில் ஒருங்கிணைந்து செயற்பட்டுள்ளார்கள்.

இன்றைய காலகட்டத்தில் D-TNA யில் இணைந்த குழுக்கள் எல்லாம் சேர்ந்து தனிகுழுவாக செயற்படுவதாக தீர்மானித்துள்ளார்கள். அதற்கு மிக முக்கியமான காரணமாக செயற்படுவது கொள்கை என்பதை விட நாடாளுமன்றத்தில் நேர அட்டவணையில் நேரம் ஒதுக்குகின்ற பொழுது தமிழரசு கட்சியின் பெயரில் தான் குழு ஒன்று பதியப்பட்டுள்ளது.

அதனால் நாடாளுமன்றில் நேரம் ஒதுக்குகின்ற பொழுது தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் நேரத்தினை ஒதுக்கி கொடுப்பதும் D TNA யினை சேர்ந்தவர்களுக்கு நேரத்தினை ஒதுக்கி கொடுக்காத காரணத்தினால் தான் இப்போது அவர்கள் தனியான குழுவாக செயற்படவுள்ளார்கள்.

கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறிய பின்னர் அவர்கள் தனிப்போக்கில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் எங்கள் கருத்துக்கள் முரண்பாடான விடையங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்த சூழ்நிலையினை சரியான முறையில் கையாளவேண்டும் என்பதற்காக நாடாளுமன்றில் தனிக்குழுவாக செயற்படப்போவதாக அறிவித்துள்ளார்கள். தனிக்குழுவாக செயற்படபோவோம் என்பதற்காக தமிழ்தேசியப்பரப்பில் தேசியப்பரப்பில் உள்ள பொதுவான விடையங்களில் இணைந்து செயற்படமாட்டோம் என்பதில் அர்த்தம் இல்லை.

13 ஆவது திருத்தச்சட்டம்

இலங்கையில் 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவருவதற்கு வெறுமென இந்தியா மட்டும் காரணமல்ல அன்றைய காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பலமாக ஆயுதக்குழுக்கள் பலமாக இருந்தது இலங்கை அரசு ஆயுதக்குழுக்களை தனித்து சமாளிக்கமுடியாத சூழ்நிலையும்தான் 13 ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் வருவதும் காரணமாக இருந்தது.

1987 ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு இயக்கங்கள் பலமான ஆயுத சக்தியாக இருந்தது அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியாவிடம் சென்று தான் பேச்சுக்கு தயார் என்று கூறியதற்கு முக்கியமான காரணம் இங்கு போராடிக்கொண்டிருந்த ஆயுதக்குழுக்களை சமாளிக்க முடியாது என்ற சூழ்நிலையினை மறக்கமுடியாது.

அந்த காலத்தில் இந்தியா தமிழ்மக்களுக்கு சார்பான ஒரு சூழ்நிலையினை உருவாக்கி ஒரு சுயாட்சியினை ஏற்படுத்தி தருவோம் என்ற வாக்குறுதிகளை இயக்கங்களுக்கு கூறியது மாத்திரம் அல்லாமல் சில அழுத்தங்களையும் கொடுத்துதான் 13 ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கான இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பிள்ளையான் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட திரிபோலி குழு உறுப்பினர்: முன்னாள் வட மாகாண அமைச்சர் குற்றச்சாட்டு | Pillaiyan Group Also In Tripoli Group Sivanesan

இந்த ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வினை தருவோம் என்று அந்த நேரம் வந்த இலங்கை இந்திய அமைதிப்படையினர் வந்து ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்று அவர்கள் கேட்டபோது இந்த தீர்வில் நம்பிக்கை இல்லாத நிலையிலும் கூட வேண்டுகோளினை ஏற்று ஆயுதங்களை கையளித்தது.

இந்தியா அந்த நேரம் பலமாக இருந்த ஆயுதக்குழுக்களை பலவீனப்படுத்தியதன் பின்னர் அந்த விடையத்தினை செயற்படுத்தாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடையம். எங்களால் தீர்பினை தரமுடியவில்லை உங்களிடம் பெற்றவற்றை திருப்பி தருகின்றோம் என்பது ஒரு வகையில் நியாயம் அதையும் செய்யாமல் பிரச்சினையினை தீர்க்காமல் பலவீனமாக 13 ஆவது திருத்த சட்டத்தினைகூட நிறைவேற்ற முடியாத அளவில் இந்தியா இருக்கின்றதா என்பது மிகவும் பெரிய கேள்விக்குறி அப்படி என்றால் இலங்கை பிரச்சினையில் இந்தியா சம்மந்தப்பட்டது தமிழர்களுகாகவோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்காகவோ அல்ல இலங்கையில் இருக்கின்ற பேரினவாத சக்திகளை காப்பாற்றுவதற்காகத்தான் நாங்கள் இலங்கைக்கு வந்தோம் என்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும்.

அல்லது இந்த பிரச்சினையில் தலையிட்டு அதனை தீர்த்துவைக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவிடம் இருக்கின்றது. இந்தியா தமிழர்களின் இந்த விடையத்தில் தெளிவாக கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US