வெளிநாட்டிலிருந்து மாறுவேடத்தில் இலங்கை வந்துள்ள பிரபல பாதாள உலகப்புள்ளி
துபாயில் இருந்து செயற்படும் பிரபல பாதாள உலகப்புள்ளியான பஸ் லலியா என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர, மாறுவேடத்தில் இன்று(28) இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
லலித் கன்னங்கரவின் தாயாரான எச்.பீ. சோமாவதி என்பவர் கடந்த 27ஆம் திகதி வயது மற்றும் நோய்கள் காரணமாக உயிரிழந்திருந்தார்.
பாதாள உலகப் புள்ளி
அவரது இறுதிக் கிரியைகள் இன்று(28) மாலை ரெஹாரணையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாதாள உலகப் புள்ளியும் போதைப் பொருள் வர்த்தகருமான பஸ் லலியா என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர, துபாயில் இருந்து இந்தியா வழியாக மாறுவேடத்தில் இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே போன்று இன்றிரவே(28) அவர் மீண்டும் படகு மூலம் இந்தியா சென்று அங்கிருந்து துபாய் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



