நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம்: கல்வெட்டுக்களில் மறைந்திருக்கும் மர்மம்(Video)
நுவரெலியா மாவட்டத்தில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் காணப்பட்டாலும் கொட்டகலை பத்தனை ஊரிலுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலயம் நம்பி வருபவர்களின் குறைத் தீர்க்கும் ஆலயம் என்று அந்த ஊர் மக்களால் நம்பப்படுகின்றது.
சுமார் 150 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் பத்தனை சந்தியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சியை முகம் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இன,மத வேறுபாடின்றி மக்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த ஆலய தரிசனத்தால், வைத்தியர்களினால் முடியாது என கைவிடப்பட்ட பல நோய்கள் குணமாக்கப்பட்டள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயம் குறித்து மேலும் பல தகவல்களை பொது மக்கள் எமது பிராந்திய செய்தியாளருக்கு தெரிவித்துள்ளனர்.







