ஜனாதிபதியின் உத்தரவில் கைப்பற்றப்பட்ட பிரபல அரிசி ஆலைகளின் அரிசி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் அடிப்படையில் பிரபல அரிசி ஆலைகளின் அரிசி கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலனறுவையில் இயங்கி வரும் இலங்கையின் முதனிலை அரிசி ஆலைகளின் அரிசி தொகைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
நிபுன, லத்பந்துர, அரலிய, ஹிரு, நிவ் ரத்ன, சூரிய இலங்கையின் முன்னணி அரிசி ஆலைகளின் அரிசி கையிருப்பு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்தின் கீழ் இந்த ஆலைகள் திடீரென இன்று சுற்றி வளைக்கப்பட்டு அரிசி கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவிற்கு சொந்தமான அரிசி ஆலையின் அரிசி கையிருப்பும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட அரிசிக்கு அரசாங்க நிர்ணய விலை செலுத்தப்படும் எனவும் இவை சதொச நிறுவனங்களின் ஊடாக விற்பனை செய்யப்பட உள்ளது.
அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையின் தலைவரது நேரடிக் கண்காணிப்பின் கீழ் அரிசி ஆலைகளின் களஞ்சிய சாலைகள் முற்றுகையிடப்பட்டு அரிசி கையிருப்பு தொகைகள் மீட்கப்பட்டுள்ளது.



