பிரபல தொழிலதிபர் முகமது ஷியாமின் கொலை விவகாரம்! உயர்நீதிமன்றில் மேல்முறையீடு
கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாமின் கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததை எதிர்த்து, காவல்துறையின் முன்னாள் பிரதி அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது மகன் ரவிந்து வாஸ் குணவர்தன மற்றும் நான்கு காவல்துறை அதிகாரிகள் இன்று உயர்நீதிமன்றில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதனையடுத்து , நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி 8-ஆம் திகதி முதல், இது தொடர்பான விசாரணையை தினந்தோறும் நடத்தவுள்ளது.
முகமட் ஷியாம் கொலை தொடர்பில், முன்னாள், பிரதி காவல்துறை அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து வாஸ் குணவர்தனா மற்றும் நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழக்குத் தொடரப்பட்டது.
இந்தநிலையில் தங்கள் மேல்முறையீட்டின் மூலம், குற்றம் சாட்டப்பட்ட 6 மேல்முறையீட்டாளர்கள், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மறு ஆய்வு செய்து விதித்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
