தலதா அரண்மனையை சுற்றி பெண்களுடன் கார் ரேஸ்! மகிந்தவிடம் பிரபல சோதிடர் தெரிவித்த விடயம் - செய்திகளின் தொகுப்பு
மகிந்த ராஜபக்ச நிச்சயமாக நம் நாட்டின் மன்னராக வருவார் என்று 1982இல் கூறினேன் என்பதை இந்நாட்டு மக்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் என இலங்கையின் பிரபல சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அநுர பண்டாரநாயக்க இருக்கும் போது நான் எப்படி ஜனாதிபதியாக முடியும் என மகிந்த என்னிடம் கேட்டார். விதி ஒரு அற்புதமான விஷயம் என்றேன். நீங்கள் நிச்சயமாக ஜனாதிபதியாக வருவீர்கள், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள் என்று நான் தெளிவாகச் சொன்னேன்.
நாங்கள் இருவரும் மிகவும் அன்பாக பேசுவோம். உண்மையில் ஒரு நல்ல அன்பு நண்பர். நான் மே அல்லது ஜூன் 2014 பற்றி பேசுகிறேன். நான் சொன்னேன், ஐயா, இந்த நேரத்தில் உங்கள் அரசாங்கம் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என்ற கருத்து இலங்கை மக்கள் மத்தியில் உள்ளது. தலதா அரண்மனையை சுற்றி பெண்களுடன் கார் ரேஸ் நடத்துவது உங்கள் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அங்கிருந்து ஒரு சிறிய சாபம் வரும் என்றும் சொன்னேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
