திலினி பிரியமாலியுடன் தொடர்பு - விசாரணைகளுக்கு முன்னிலையாகாது தவிர்க்கும் பிரபல நடிகர்
சி.ஐ.டியில முன்னிலையாகாது தவிர்க்கும் பிரபல நடிகரும் மனைவியும்
பல பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் சம்பந்தப்பட்ட நடிகர் ஒருவரும் அவரது மனைவியும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காது தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த அரசியலுடன் சம்பந்தப்பட்ட அந்த நடிகர் திலினி பிரியமாலியுடன் கோடிக்கணக்கான ரூபா வர்த்தகங்களை செய்தவராம்.
விசாரணைகளுக்கு வருமாறு அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும் அவர் விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லையாம்.
இந்த நடிகரும் அவரது மனைவியும் அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை வைத்துள்ளவர்கள் என பேசப்படுகிறது.
அதேவேளை திலினி பிரியமாலி சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய பிரபல நடிகைகள் இருவர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடிகைகளில் ஒருவரிடம் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் ஏற்கனவே விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
தொலைபேசி உரையாடல் பற்றி ஞாபகம் இல்லை எனக்கூறிய நடிகை
குறித்த நடிகை கோடிஸ்வரரான வர்த்தகருடன் மேற்கொண்டுள்ள ஆபாசமான தொலைபேசி உரையாடல் தொடர்பாக பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
எனினும் அவை பற்றி தனக்கு எந்த ஞானகமும் இல்லை என அந்த நடிகை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திலினி பிரியமாலி, தனது நிறுவனத்தில் முதலீடு செய்த செல்வந்தர்கள் உட்பட பலருடன் நடிகைகளை பழக செய்து, அவர்கள் இடையிலான தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.




