பூதன்வயலில் சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் : சந்தேகநபருக்கு விளக்கமறியல் (Photos)
முள்ளியவளை - பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 08.01.2022 அன்று முள்ளியவளை - பூதன்வயல் பகுதியில் தென்ந்தோட்ட கிணறு ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணுடன் வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற முள்ளியவளை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுர்ததினை சேர்ந்த ஆணினை இன்று முள்ளியவளை பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
