கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த குடும்பப் பெண் கொடூரக் கொலை
இராஜாங்கனையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஒரு குடும்பப் பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.
இறந்தவர் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் ஆவார்.
மேலதிக விசாரணை
மேற்படி பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது கணவரிடம் இருந்து பிரிந்து அவரது வீட்டில் வசித்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நேற்று புதன்கிழமை இரவு தனது வீட்டின் முன் தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் அவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
அந்தப் பெண்ணை உறவினர்கள், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார் எனக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



