முடக்க நிலை கட்டுப்பாடுகளால் தீவிரமடையும் குடும்ப வன்முறை - 150 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கொவிட் தொற்றினை கட்டுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வீடுகளில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வீடுகளில் இடம்பெற்ற காரணமாக 150க்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 பேர் கணவனால் தாக்கப்பட்ட 30 மனைவிகள் உள்ளடங்குவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்கள் மதுபானம் அருந்திவிட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டமையினால் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக 10 நாட்களில் வீடுகளில் கீழே விழுந்த மற்றும் தீக்காயங்களுக்குள்ளான 100 பேர் வரையில் திடீர் விபத்து பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கொழும்பு மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 23 - 70 வயதிற்குட்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
