பதவியிலிருந்து மஹிந்தவை வெளியேற்ற குடும்பத்தினரே செய்யும் சதித் திட்டம்! பரபரப்புத் தகவலை வெளியிட்ட சிங்கள ஊடகம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்காக அவரது குடும்பத்திற்குள்ளேயே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகுவதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்தியும் இந்த குழுவினரின் கோரிக்கைக்கு அமைய வெளியாகியதென தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பிரதமரை பதவியில் இருந்து விலக்குவதற்காக இந்த நாட்களில் தனியாக ஒரு அலுவலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேசத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
